For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு..!! - ஆட்சியர் உத்தரவு

8 days curfew has been issued by district administration in Tenkasi district on the occasion of Ondiveeran Veerawanaka Day and Pulithevan birthday.
01:49 PM Aug 18, 2024 IST | Mari Thangam
தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு       ஆட்சியர் உத்தரவு
Advertisement

தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் மற்றும் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் 20.08.2024 அன்று நடைபெறும் ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் 01.09.2024 அன்று நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும்.

பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள்,  தென்காசி மாவட்டம் முழுமைக்கும், (18.08.2024 ) இன்று மாலை 6.00 மணி முதல் 21.08.2024 காலை 10.00 மணி வரையும் அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பின் படி 4 பேருக்கு மேல் நின்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பூலித்தேவனின் 309 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்ச்சிகளுக்காக மொத்தமாக ஆறு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.

Read more ; அச்சுறுத்தும் Mpox வைரஸ்..!! நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்..!!

Tags :
Advertisement