For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ராகுல் காந்தி-க்கு எதிரான சர்ச்சை பேச்சு' : பாஜக MLA மீது 8 வழக்குகள் பதிவு..!!

8 cases have been registered against Karnataka BJP MLA Bharat Shetty who said that Lok Sabha Leader of Opposition Rahul Gandhi should be slapped on the cheek in Parliament itself.
10:28 AM Jul 10, 2024 IST | Mari Thangam
 ராகுல் காந்தி க்கு எதிரான சர்ச்சை பேச்சு    பாஜக mla மீது 8 வழக்குகள் பதிவு
Advertisement

மக்களவை எதிர்க்கட்சி தலைவர்ராகுல் காந்தியை நாடாளுமன் றத்திலேயே கன்னத்தில் அறைய வேண்டும் என்று பேசிய கர்நாடக பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

BJP MLA: ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பாரத் ஷெட்டி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மக்களவையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தனது முதல் உரையில், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்போதும் வன்முறை, வெறுப்பு ஆகியவற்றையே பேசுகிறார்கள் என்று பா.ஜ.க-வைத் தாக்கினார். கூடவே, சிவனின் படத்தைக் காட்டி, இதிலிருப்பது அபயமுத்ரா. இது அச்சமின்மை, உறுதி, பாதுகாப்பின் சைகை. இதுதான் காங்கிரஸின் சின்னம்’ என்றும் ராகுல் காந்தி கூறினார்.

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பிரதமர் மோடி, ஒட்டுமொத்த இந்துக்கள் மீதான தாக்குதல் என ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், அடுத்த கணமே ராகுல் காந்தி, மோடியோ, பா.ஜ.க-வோ, ஆர்.எஸ்.எஸ்ஸோ ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் அல்ல’ என்றார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்தநிலையில், மங்களூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பாரத் ஷெட்டி, ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும் என்று பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மங்களூருக்கு வந்தால் இதை அவருக்கு ஏற்பாடு செய்வோம். சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தால், அவர் சாம்பலாகிவிடுவார். இந்துக்களைப் பற்றி என்ன சொன்னாலும் இந்துக்கள் அமைதியாகக் கேட்பார்கள் என்று அவர் நினைக்கிறார். இந்துக்களுக்கு எதிரான கொள்கையை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் அவர் குரைத்தால் உள்ளூர் தலைவர்கள் இங்கு வாலை ஆட்டத் தொடங்குவார்கள்.

இந்துக்களும், இந்துத்துவாவும் வேறு வேறு என்று காங்கிரஸ் கூற ஆரம்பித்துவிட்டது. இத்தகைய தலைவர்களால் இந்துக்கள் எதிர்காலத்தில் ஆபத்தைச் சந்திக்க நேரும். இந்துக்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலையை அவர்கள் உருவாக்குவார்கள். சிவாஜியும் மகாராணா பிரதாப்பும் இந்து சமூகத்தில் பிறந்தவர்கள்தான். தேவைப்படும்போது நாங்கள் ஆயுதங்களை எடுப்போம். ஆயுதங்களை வணங்கிவிட்டு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, நாடாளுமன்றத்தில் பலமான அறைக்குப் பிறகு ராகுல் காந்தி சரியாகிவிடுவார்” என்று கூறினார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏபரத் ஷெட்டி மீது 3 பிரிவுகளில் மங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல உடுப்பி, தட்சின கன்னடா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement