கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலப்பு..!! தமிழ்நாடு அரசு பரபரப்பு அறிக்கை..!!
கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ”சம்பவம் நடந்த உடனே மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை கண்டறிய வழக்கானது சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதியப்பட்டன. கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஏடிஜிபி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 9 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுதான அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை சிபிசிஐடி போலீசார் 132 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழக டிஜிபிக்கள் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Read More : புதிதாக தேர்வானவர்களுக்கு இம்மாதம் ரூ.1,000 கிடைக்குமா..? அட இவங்களுக்கு இப்படித்தான் பணம் போகுதா..?