முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

7-வது கட்ட தேர்தல்... 904 வேட்பாளர்கள் போட்டி...!

06:53 AM May 27, 2024 IST | Vignesh
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024-ன் 7-வது கட்டத்தில் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தக் கட்டத்தில் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,105 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனைக்குப் பின் 954 மனுக்கள் செல்லத்தக்கவையாக ஏற்கப்பட்டன.

Advertisement

7-வது கட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளில் 598 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தின் 13 மக்களவைத் தொகுதிகளில் 495 மனுக்கள் தாக்கலாயின. பீகாரில் உள்ள ஜஹனாபாத் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 73 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பஞ்சாபின் லூதியானாவில் 70 மனுக்கள் பெறப்பட்டன.

13 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முப்பதாம் தேதியுடன் அனைத்து பிரச்சாரங்களும் முடிவடைய உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து நான்காம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.

Tags :
7th phaseelection commissionElection Poll 2024
Advertisement
Next Article