For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நாடு முழுவதும் 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும்”..!! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!!

The BJP government has created 1 lakh medical posts across the country. 75,000 new medical posts will be created across the country.
02:45 PM Nov 13, 2024 IST | Chella
”நாடு முழுவதும் 75 000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும்”     பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
Advertisement

பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ.12,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தர்பங்காவில் ரூ.1,260 கோடி மதிப்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், ரூ.5,070 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,520 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Advertisement

மேலும் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்தப் பின் பேசிய பிரதமர் மோடி, ”பீகார் தர்பங்காவில் எய்ம்ஸ் கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும். எய்ம்ஸ் மருத்துவமனையால் மேற்குவங்கத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பலனடையும் என்று தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை மூலம் மேற்கு வங்கம், நேபாளத்தில் இருந்து வரக்கூடிய நோயாளிகளுக்கும் பெருமளவு பயன் பெறுவார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையால் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பீகாரில் நிதிஷ் ஆட்சிக்கு வந்தபின் நிலைமை மேம்பட்டது. பாஜக அரசு நாடு முழுவதும் 1 லட்சம் மருத்துவ இடங்களை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும்.

ஆயுஷ்மான் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் ரூ.1.25 லட்சம் கோடி சேமித்தன. இத்திட்டம் இல்லையென்றால், பெரும்பாலானோர் சிகிச்சை பெற்றிருக்க மாட்டார்கள். ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 4 கோடி மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய 1.5 லட்சம் குடும்பங்களுக்காக சுகாதார சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Read More : ”கண்டிப்பா ஆக்‌ஷன் எடுப்போம்”..!! ”போராட்டத்தை கைவிடுங்க”..!! மருத்துவர் விவகாரத்தில் உதயநிதி உறுதி..!!

Tags :
Advertisement