For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கருப்பு மை.! செருப்பு மாலை.! எச்சிலை நக்கச் செய்து கொடூரம்.! 75 வயது இஸ்லாமிய முதியவருக்கு நேர்ந்த அவலம்.!

12:20 PM Dec 10, 2023 IST | 1newsnationuser4
கருப்பு மை   செருப்பு மாலை   எச்சிலை நக்கச் செய்து கொடூரம்   75 வயது இஸ்லாமிய முதியவருக்கு நேர்ந்த அவலம்
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் வன்கொடுமை தாக்குதல் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோ அனைவரையும் அச்சமடைய செய்திருக்கிறது.

Advertisement

உத்திர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் பகுதிக்கு அருகே உள்ள திகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹபத் அலி. இவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள் இவரது கைகளை கட்டி அடித்து உதைத்துள்ளனர். மேலும் இவரது முகத்தில் கருப்பு மை பூசி காலணிகளை மாலையாக அணிவித்து ஊர்வலமாக கிராமம் முழுவதும் அழைத்துச் சென்றனர்.

सिद्धार्थनगर : बुजुर्ग संग इंसानियत को शर्मसार करत की गई अमानवीयता

बुजुर्ग के मुंह पर कालिख लगा कर गले में पहनाई जूतों की माला

अभद्रता की सारी पराकाष्ठा को तोड़ पूरे गांव में घूमाया

इतना ही नहीं बुजुर्ग से थूक कर चटवाया

उठक बैठक करवाने का वीडियो सोशल मीडिया पर वायरल

बुजुर्ग… pic.twitter.com/7OX91rlIPy— News1Indiatweet (@News1IndiaTweet) December 8, 2023

பின்னர் அவர்கள் எச்சிலை காரி உமிழ்ந்து அதனை நக்கச் செய்து அந்த முதியவரை வன்கொடுமை செய்திருக்கின்றனர். மேலும் இந்த மனிதத் தன்மை அற்ற கொடூர காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து இருக்கின்றனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணிடம் பேசியதற்காக முதியவர் மனிதத் தன்மையற்ற வகையில் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் இது போன்ற வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tags :
Advertisement