முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

72 வயது தந்தையை கோடாரியால் அடித்தே கொன்ற மகன்..! வெளியான பகீர் உண்மை.!

06:20 PM Nov 16, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

குடும்பத் தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

Advertisement

இலங்கையின் ஓபநாயக்க பிரதேசத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 12ம் தேதி மதியம் கணவன் மனைவி மற்றும் மகன் ஆகியோரிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த மகன் கோடாரியால் தனது தந்தையை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

இறந்த நபர் 72 வயதுடைய அப்பரசிங்கே என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மகனே தனது தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

Tags :
crime newstamil newsதந்தையை கோடாரியால் அடித்தே கொன்ற மகன்
Advertisement
Next Article