முன்னாள் காதலி அனுப்பிய அஞ்சல் அட்டை.! 71 வயது மனைவி கொலை முயற்சியில் கைது.!
அமெரிக்காவில், 60 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த பெண் அனுப்பிய அஞ்சலட்டையை பெற்றதால், தனது கணவரை, 71 வயது மனைவி கொல்வதற்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் 71 வயதுடைய பெர்தா யால்டர் தனது கணவனுடன் வசித்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி 52 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில் அந்தக் கணவர், 60 வருடங்களுக்கு முன்பு காதலித்த ஒரு பெண்ணிடம் இருந்து அஞ்சலட்டை வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த பெர்தா யால்டர் கடுங்கோபம் கொண்டார். பின்பு தலையணையை வைத்து அழுத்தி அவரது கணவரைக் கொல்ல முயற்சித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருமதி யால்டரை கைது செய்தனர். அப்போது அவரது கணவரின் உடம்பில் பல வெட்டு காயங்களும், கடி அடையாளங்களும் தென்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அந்த அஞ்சல் அட்டையில் என்ன எழுதி இருந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. திருமதி யால்டரின் கணவர் காவல்துறையின் உதவியால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருமதி யால்டர் இரண்டாம் நிலை கொலை முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர், 71 வயதுடைய பெண்மணியின் மீது இந்த குற்றச்சாட்டை வைத்திருப்பது அபத்தமானது என்று தெரிவித்துள்ளார். வழக்கை இவருக்கு சாதகமாக முடிக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆயினும் எதிர்தரப்பில் வாதாடியவர்கள் மூச்சுத் திணறல் ஏற்படுத்தி அந்த பெரியவரை கொல்ல முற்பட்டதாலும், அவரின் மீது சிறுநீர் கழித்ததாலும், அந்தப் பெண் தண்டனையைப் பெற தகுதியானவர் என்பதை தெரிவித்தனர். பிப்ரவரி 1ஆம் தேதி இறுதி பத்திர விசாரணை நடக்கும் என்பதால் அதுவரையில் திருமதி யால்டரை விசாரணை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.