For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

700 சொகுசு கார்கள்..!! பிரம்மாண்ட அரண்மனை..!! உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம்..!!

11:16 AM Jan 20, 2024 IST | 1newsnationuser6
700 சொகுசு கார்கள்     பிரம்மாண்ட அரண்மனை     உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம்
Advertisement

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அவரது முதலெழுத்துக்களான MBZ என்பதை கொண்டு அன்போடு அழைக்கப்படும் ஒரு நபர். இவர், தனது மாபெரும் குடும்பத்திற்கு தலைமை தாங்கி வருகிறார். இவரது குடும்பத்தில் மொத்தம் 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள் உள்ளனர். எமிராட்டி அரச குடும்பத்திற்கு 9 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் உள்ளனர். லண்டன் நகர மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப், உலகின் எண்ணெய் இருப்புகளில் சுமார் 6% மற்றும் பாடகர் ரிஹானாவின் பியூட்டி பிராண்ட் ஃபென்டி முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரை பல பிரபலமான நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது இந்த துபாய் அரச குடும்பம்.

Advertisement

அபுதாபி ஆட்சியாளரின் இளைய சகோதரர் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யானிடம் சுமார் 700-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில், ஐந்து புகாட்டி வேய்ரான்கள், ஒரு லம்போர்கினி ரெவென்டன், ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் CLK GTR, ஒரு ஃபெராரி 599XX மற்றும் ஒரு Mc12 கார்ன் ஆகியவை அடங்கும். பல Single Copy கார்களும் இருக்கிறது. அபுதாபியில் உள்ள கில்டட் காஸ்ர் அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் தான் இந்த குடும்பம் வாழ்ந்து வருகின்றனர்.

இது UAE இல் உள்ள பல அரண்மனைகளில் முக்கியமானது மற்றும் மிகப்பெரியது. ஏறக்குறைய 94 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய அரண்மனையில் 3,50,000 படிகங்களால் ஆன சரவிளக்கு மற்றும் மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தவிர, துபாய் ராயல்ஸ் பாரிஸ் மற்றும் லண்டன் உட்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை இருக்கின்றன. இந்த குடும்பத்தின் முன்னாள் தலைவர் இங்கிலாந்தில் பரந்த அளவிலான சொத்துக்களை வைத்திருந்தார். ஒருகாலத்தில் அவர்கள் "லண்டன் நில உரிமையாளர்" என்று செல்லப்பெயர் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008இல் MBZ இன் அபுதாபி யுனைடெட் குழு, UK கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டியை சுமார் 2,122 கோடிக்கு வாங்கியது. மான்செஸ்டர் சிட்டி, மும்பை சிட்டி, மெல்போர்ன் சிட்டி மற்றும் நியூயார்க் நகர கால்பந்து கிளப்புகளை இயக்கும் சிட்டி கால்பந்து குழுமத்தின் 81 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement