மயோனைஸ் சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
உணவகங்களில் பொரித்த பண்டங்களின் சுவையை கூட்ட மயோனைஸ் வழங்கப்படும். இதனால் சாப்பிடும் பண்டங்களின் ருசி கூடும். இந்த மயோனைஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பர். கடந்த சில தினங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் உள்ள உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த மயோனைஸ்ஸில் உயிரைக்கொல்லும் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியா கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பிராண்டு மயோனைஸ்க்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்தது.
இந்நிலையில் தற்போது கேரள மாநிலம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் குழிமந்தி என்ற உணவை 70 பேர் சாப்பிட்டுள்ளார். அவர்களுக்கு சைடிஷாக மயோனைஸ் தரப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பதிதத்தவர்கள் சிகிசசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் மயோனைஸ் உட்கொண்டதே உணவு நச்சுத்தன்மைக்கு காரணம் என தெரிவித்துள்ளது. மயோனைஸ் சாப்பிட்ட ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.