விளையாட்டாக தோண்டிய குழியில் விழுந்து 7 வயது சிறுமி மரணம்.! சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.!
இந்தியானாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியும், அவரது சகோதரனும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக சென்ற ஃப்ளோரிடா கடற்கரையில், லாடர்டேல்-பை-தி-சீ என்ற இடத்தில் மணலில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணல் சரிந்து விழுந்தில், இரண்டு குழந்தைகளும் குழியில் மண்ணுக்குள் புதைந்தனர். நான்கு முதல் ஐந்து அடி வரை தோண்டப்பட்டிருந்த அந்த குழியில், சிறுவன் நெஞ்சுவரை புதைக்கப்பட்டதால், சிறுவனை மட்டும் காப்பாற்ற முடிந்தது. ஏழு வயது சிறுமியின் உடல் பாகங்கள் ஏதும் வெளியே தெரியாததால், அந்த சிறுமையை உயிருடன் மீட்க முடியவில்லை. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் உள்ள இந்தியானாவைச் சேர்ந்த ஒரு தம்பதிகள், தனது இரு பிள்ளைகளுடன், சுற்றுலாத்தலமான மயாமிக்கு சென்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஸ்லோன் மேட்டிங்லி என்ற 7 வயது சிறுமி, தனது 9 வயது சகோதரர் மடாக்ஸுடன் ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள மணலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது இருவரும் லாடர்டேல்-பை-தி-சீ என்ற இடத்தில் உள்ள மணலில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நான்கு முதல் ஐந்து அடிகள் வரை தோண்டப்பட்ட அந்த குழியில், மணல் சரிவு ஏற்படவே அந்த குழந்தைகள் இருவரும் குழிக்குள் புதைந்துள்ளனர்.
அந்த சிறுவனின் மார்பு பகுதி வெளியே தெரிந்ததால், அருகில் இருந்தவர்களால் அவனைக் காப்பாற்ற முடிந்தது. அந்த சிறுமியின் உடல் பாகங்கள் வெளியே தெரியாததால், அவரது தந்தை கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். 911 என்ற உதவி எண்ணுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
மீட்பு பணியாளர்கள் விரைந்து வந்த போதிலும், அந்த சிறுமையை உயிருடன் மீட்க முடியவில்லை. மீட்பு பணிகள் அனைத்தும், அருகில் இருந்தவர்களால் படமாக்கப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.