அதிர்ஷ்டம் தரும் 7 வெள்ளை குதிரை படம்.. வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்..!! பலன்கள் என்ன?
பொதுவாக பலரது வீடுகளிலும் இயற்கை சார்ந்த படங்கள், கடவுளின் படங்கள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை சுவற்றில் மாட்டி வைத்திருப்போம். இவற்றில் ஒரு சில படங்கள் வீட்டில் வைக்கும் போது அவை நேர்மறையான ஆற்றலை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக வழிவகை செய்யும் என வாஸ்து நிபுணர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வீட்டில் அடிக்கடி சண்டை வருவது, என்னதான் நேர்மையாக உழைத்தாலும் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற எண்ணம், தொழிலில் வருமானம் இல்லை போன்ற எதிர்மறையான விஷயங்கள் தொடர்ந்து நடக்கிறதா? அப்படியெனில் வீட்டில் ஏழு வெள்ளை நிற குதிரைகள் ஓடுவது போன்ற படத்தை வைப்பதன் மூலம் நேர்மறையான ஆற்றல் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
குறிப்பாக ஏழு குதிரைகள் என்பதற்கு வாஸ்துவின் படி பல காரணங்கள் இருந்து வருகின்றன. அதாவது, ஏழு என்ற எண்ணிற்கு பல சிறப்பு குணங்கள் உள்ளன. ஏழு சப்தரிஷிகள், ஏழு வானவில் வண்ணங்கள், ஏழு ஸ்வரங்கள், சூரிய பகவானின் வாகனத்தில் ஏழு குதிரைகள் இதை போன்று பல்வேறு சிறப்பு வாய்ந்த விஷயங்களில் 7 ஆம் எண் தான் இருந்து வருகிறது.
எந்த திசை சிறப்பு: வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்டி வைக்கலாம். இது உங்களுக்கு வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் உங்களின் புகழும் செல்வமும் பாராட்டப்படும்.கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ஒரு ஜோடி குதிரை பொம்மைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் தங்கும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
எங்கு வைக்கக்கூடாது : வெள்ளை குதிரைகள் நேர்மறை ஆற்றலின் சின்னங்கள். வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தி இந்த படத்திற்கு உள்ளதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகளின் ஓவியத்தை வைக்கலாமா என பலருக்கும் கேள்வி எழும். படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வைக்கக்கூடாது. பூஜை அறை, படிக்கும் அறை, கழிப்பறையை எதிர்கொள்ளும் சுவர்கள், பிரதான கதவு ஆகியவற்றில் ஏழு குதிரை ஓவியத்தை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியானதல்ல. ஏழு குதிரைகள் அடங்கிய இந்த ஓவியத்தை உங்களுடைய வரவேற்பறையில் வைக்கலாம். இந்த குதிரைகள் தண்ணீரில் ஓடாமல் திறந்த நிலத்தில் ஓடுவதுபோல இருக்க வேண்டும்.
Read more ; வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவம்பரில் வெளுக்க போகும் கனமழை..!! தப்பிக்குமா தமிழகம்?