கர்நாடக நிலச்சரிவில் 7 பேர் பலி!. 15க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்த சோகம்!. மீட்புப் பணிகள் தீவிரம்!
Karnataka landslide: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிரூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 66ல் சாலையோரம் பெட்டிக்கடை நடத்தி வந்த குடும்பத்தினர், மலையிலிருந்து கீழே விழுந்த சேறு மற்றும் மண்ணில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக முதல்கட்ட தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் எரிவாயு டேங்கர் ஒன்றும் அருகில் உள்ள கங்காவலி ஆற்றில் கவிழ்ந்ததாகவும் முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் ஆதாரங்கள் தெரிவித்தன.
சம்பவத்தின் போது கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த டேங்கர் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பிய கார்வார் எம்எல்ஏ சதீஷ் சைல், நிலச்சரிவைத் தொடர்ந்து கங்காவலி ஆற்றில் 10-15 பேர் விழுந்திருக்கலாம் என்று தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறினார்.
Readmore: அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு…! ஜூலை 24 & 25 ஆகிய தேதிகளில் பயிற்சி முகாம்…!