முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நேபாளம் நிலச்சரிவு | ஆற்றில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் இதுவரை 7 பேர் பலி..!!

7 Indians killed as tourist buses fall into swollen river after landslide in Nepal
11:04 AM Jul 12, 2024 IST | Mari Thangam
Advertisement

நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் காணாமல் போன மற்ற பயணிகளை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

Advertisement

நேபாளத்தில் கனமழை காரணமாக 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் கனமழை காரணமாக 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்டதில் திரிசுலி ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகளும் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளில் ஓட்டுனர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்திருந்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளையும் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் காணாமல் போன மற்ற பயணிகளை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

Tags :
#LandSlide#Nepal#Nepal landslide#Trishuli River
Advertisement
Next Article