முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குஜராத் | அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!! - இதுவரை 7 பேர் பலி

At least seven people died and 10 others were injured when a multi-storey building collapsed on Saturday in Surat, Gujarat, amid heavy rains.
09:47 AM Jul 07, 2024 IST | Mari Thangam
Advertisement

குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால் சூரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று பெய்த கனமழையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானாது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இச்சம்பவம் குறிட்த்ஹு சூரத் காவல்துறை ஆணையர் தெரிவிக்கையில், "SDRF மற்றும் NDRF குழுக்களால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பிற்பகல் 3 மணியளவில் பெய்த கனமழையின் போது நிகழ்ந்தது. ஆறு மாடி கட்டிடத்தில் வசிப்பவர்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர். அந்தக் கட்டிடத்தில் சுமார் 30 அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாகவும், அதில் 45 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இரவு ஷிப்ட் முடிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

Tags :
gujaratHeavy rainsSurat Building Collapse
Advertisement
Next Article