முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூப்பர் நியூஸ்...! ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை சேமிக்கும் பெண்களுக்கு 7.5 % வட்டி...!

7.5% interest for women who save Rs.1,000 magalir urimai thogai
06:46 AM Jul 10, 2024 IST | Vignesh
Advertisement

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை மலையரசி தொடர் வைப்புத் திட்டம் மூலம் சேமித்தால் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது

Advertisement

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உரிமைத் தொகையை நமது வங்கிக் கணக்கில் சேமித்தால் சாதாரணமாக 3 முதல் 4 சதவீதம் வரை வட்டியாகக் கிடைக்கிறது. ஆனால் ,பெண்கள் சேமிக்கும் மகளிர் உரிமைத் தொகைக்கு 7.5 சதவீதம் வரை வட்டி தரக்கூடிய திட்டம் உள்ளது. நீலகிரி மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி செயல்படுத்தி வருகிறது.

நீலகிரியில் மகளிர் உரிமைத் தொகை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக, கூட்டுறவு வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை இருந்தால் அதற்கு 3 சதவீதம் வட்டி மட்டுமே வழங்கப்படும். ஆனால், மலையரசி தொடர் வைப்புத் திட்டம் மூலம் சேமித்தால் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சேமித்து வரும் பட்சத்தில் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.

Tags :
Bank savingIntrestMagalir urimai thogaitn government
Advertisement
Next Article