Medicine: 69 மருந்துகளுக்கான விலை உச்சவரம்பு...! தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி உத்தரவு...!
நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தும் மருந்துகள் உட்பட 69 மருந்துகளுக்கான விலை உச்சவரம்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் சிடாகிளிப்டின் மற்றும் மெட்ஃபார்மின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை விலை ரூ.13.25 எனவும், உயர் ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தும் ஓல்மெசர்தன் மெடாக்சோமில் (20 Mg), அம்லோடைபைன் (5Mg) மற்றும் ஹைட்ரோகுளோரோதையாசைடு (12.5 Mg) மாத்திரை விலை ரூ.8.92 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் 69 வகையான மருந்துகளுக்கு மருந்துகள் விலை கட்டுப்பாடு உத்தரவு 2013-ன்படி உச்சவரம்பு விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஜிஎஸ்டி நீங்கலாக அரசு நிர்ணயித்த விலைதான் அதிகபட்ச சில்லரை விலை. மருந்துகள் அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டால், கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட மருந்துதயாரிப்பு நிறுவனங்கள் மருந்துகள் விலை கட்டுப்பாடு உத்தரவு விதிமுறைகள் படி வட்டியுடன் சேர்ந்து டெபாசிட் செய்ய வேண்டும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.