For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 69.46% வாக்குப்பதிவு..! 2019-ஐ விட 3% குறைவு..! இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…!

08:09 AM Apr 20, 2024 IST | Kathir
தமிழ்நாட்டில் 69 46  வாக்குப்பதிவு    2019 ஐ விட 3  குறைவு    இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…
Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 2019 தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.

Advertisement

வாக்குப்பதிவு முடிந்ததும், முகவர்கள் முன்னிலையில், பதிவான வாக்குகள், பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அதன்பின், மின்னணு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. இங்கு துணை ராணுவம், உள்ளூர் போலீஸார், ஆயுதப் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 10.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர்.

இந்நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியிருப்பதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 81.48% வாக்குகளும், அடுத்தபடியாக கள்ளக்குறிச்சியில் 79.25% வாக்குகளும் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்தியசென்னையில் 53.91% வாக்குகளும், தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக:

  1. திருவள்ளூர் - 68.31
  2. வடசென்னை - 60.13
  3. தென் சென்னை - 54.27
  4. மத்திய சென்னை - 53.91
  5. ஸ்ரீபெரும்புதூர் - 60.21
  6. காஞ்சிபுரம் - 71.55
  7. அரக்கோணம் - 74.08
  8. வேலூர் - 73.42
  9. கிருஷ்ணகிரி - 71.31
  10. தர்மபுரி - 81.48
  11. திருவண்ணாமலை - 73.88
  12. ஆரணி - 75.65
  13. விழுப்புரம் - 76.47
  14. கள்ளக்குறிச்சி - 79.25
  15. சேலம் - 78.13
  16. நாமக்கல் - 78.16
  17. ஈரோடு - 70.54
  18. திருப்பூர் - 70.58
  19. நீலகிரி - 70.93
  20. கோயம்புத்தூர் - 64.81
  21. பொள்ளாச்சி - 70.70
  22. திண்டுக்கல் - 70.99
  23. கரூர் - 78.61
  24. திருச்சிராப்பள்ளி - 67.45
  25. பெரம்பலூர் - 77.37
  26. கடலூர் - 72.28
  27. சிதம்பரம் - 75.32
  28. மயிலாடுதுறை - 70.06
  29. நாகப்பட்டினம் - 71.55
  30. தஞ்சாவூர் - 68.18
  31. சிவகங்கை - 63.94
  32. மதுரை - 61.92
  33. தேனி - 69.87
  34. விருதுநகர் - 70.17
  35. ராமநாதபுரம் - 68.18
  36. தூத்துக்குடி - 59.96
  37. தென்காசி - 67.55
  38. திருநெல்வேல் - 64.10
  39. கன்னியாகுமரி - 65.46

தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

Tags :
Advertisement