மாஸ்...! 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டா...! முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு...! தமிழக அரசு தகவல்
மக்கள் கோரிக்கையை ஏற்று ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆங்கிலேயேரால் உருவாக்கப்பட்டு ஒரு காலத்தில் நிலவரி வசூலில் மட்டும் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை, பொது நிர்வாகம், மக்கள் நலன் காக்கும் துறையாக உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், 6,52,559 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்கிருந்தும் எப்போதும் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் மூலம், 2 ஆண்டுகளில் 41,81,723 பட்டா மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன.
மாநிலத்தில் மொத்தம் உள்ள186 நகரங்களில் 179 நகரங்களுக்கான புலப்படங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 7 நகரத்துக்கான புலப்படங்கள் இணையத்தில் ஏற்றும் பணி நடைபெறுகிறது.2.75 கோடி சன்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் அவர்கள் முதியோர் ஓய்வூதியம் 1,000 ரூபாய் என்பதை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தியதும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான். அதிமுக ஆட்சியில் 34.05 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை தற்போது 34.90 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேலும் 80 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5,337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 29,54,269 குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், நிவாரணம் கோரிய 2,68,869 குடும்பங்களுக்கு, தலா ரூ.6 ஆயிரம், எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.1.15 கோடி, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.48.18 கோடியும் நிவாரணமாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 6,63,760 குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், மிதமான பாதிப்புக்குள்ளான 14,31,164 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.541.37 கோடி வாழ்வாதார நிவாரணம், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.201.67 கோடி நிவாரணம்வழங்கப்பட்டது. இரு நிகழ்வுகளாலும் பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்பு சேதங்களைச் சீரமைக்க ரூ.130 கோடி, மீனவர்களுக்கு ரூ.28.10 கோடியை முதல்வர் வழங்கினார்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவற்றில் 2 ஏக்கர், 3 ஏக்கர் நிலங்கள் ஒருவருக்கே இருந்தால், அவருக்கு உடனடியாக பட்டா மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. ஒருவர் 2 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி, மனைகளாகப் பிரித்திருந்தால் மனை விற்பனை பதிவின்போது பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. நில அளவை போன்ற அனைத்து பணிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இணைம் வாயிலாக எந்நேரமும் எங்கிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான சேவையை முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் 23.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகளில் 41 இலட்சத்து 81 ஆயிரத்து 723 பட்டா மாறுதல்கள் இணையம் வழி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது