'64 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்'!. 18 வயது தடகள வீராங்கனைக்கு நேர்ந்த கொடூரம்!. பாய்ந்தது போக்சோ!
Kerala: கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள 18 வயது சிறுமி, 64 பேர் 4 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில், எலவும்திட்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சுமார் 4 ஆண்டுகளில் சுமார் 64 பேர் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் ஏற்கனவே சிறையில் உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பத்தனம்திட்டா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜீவ் என் கருத்துப்படி, அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பள்ளி ஆலோசனை கூட்டத்தில் முதலில் பேசினார். ஆலோசகர்கள் தொடர்பு கொண்ட குழந்தைகள் நலக் குழுவின் தலையீட்டிற்குப் பிறகு போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விளையாட்டு வீராங்கனையான சிறுமி, விளையாட்டு முகாம்கள் உட்பட பத்தனம்திட்டாவின் பல்வேறு இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள். மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமியிடம் தனிப்பட்ட கைபேசி இல்லை, தந்தையின் மொபைல் போனையே பயன்படுத்துவார். இந்த போனில் தன்னை துஷ்பிரயோகம் செய்த சுமார் 40 பேரின் எண்களை சேமித்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிறுமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள், குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த ஒரு உளவியலாளரின் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் குறிப்பிட்டனர்.
Readmore: Tn Govt: அரை ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.3000 மானியம் வழங்கும் திட்டம்…!