For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.63,000 சம்பளத்தில் தபால்துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

05:04 PM Apr 27, 2024 IST | Chella
மாதம் ரூ 63 000 சம்பளத்தில் தபால்துறையில் வேலை     உடனே அப்ளை பண்ணுங்க     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

தபால் துறையில் தற்போது ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு 27 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி, பெங்களூரில் 15 பேர், மைசூரில் 3 பேர் , மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார், மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். சம்பளம்:

மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். அலோவன்ஸ் தொகையும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.inidapost.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மே 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மேல்புறத்தில் ‛‛Applicaton for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Bengaluru'' என குறிப்பிட வேண்டும்.

முகவரி:

The Manager, Mail Motor Service, Bengaluru - 560 001

மேலும் விவரங்கள்:

இந்த பணியிடம் தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19042024_MMS_English.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Read More : ’ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு’..!! ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!!

Advertisement