முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

C-Voters: மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும்... 62 சதவீதம் பேர் ஆதரவு...!

06:14 AM Apr 03, 2024 IST | Vignesh
Advertisement

62 சதவீதம் பேர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர விரும்புகிறார்கள் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், மறுபுறம், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சியான ஐ.என்.டி.ஐ.ஏ., பேரணிகளை நடத்தி வருகிறது.

Advertisement

லோக்சபா தேர்தலில் முக்கிய மாநிலங்களில் ஒன்று உத்தரபிரதேசம். லோக்சபாவில் அதிகபட்சமாக 80 இடங்களை கொண்ட மாநிலம். பிரதமர் நாற்காலிக்கான போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், ஏபிபி - சி-வோட்டர்ஸ் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தியது. சி-வோட்டர் கணக்கெடுப்பின்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணிகளில் 42 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர் என்றும், 29 சதவீதம் பேர் திருப்தி குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 27 சதவீத மக்கள் அரசாங்கத்தின் பணிகளில் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும், இரண்டு சதவீதம் பேர் உறுதியாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார். 62 சதவீதம் பேர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என விரும்புகிறார்கள், 24 சதவீதம் பேர் ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க விரும்புகிறார்கள்.

Advertisement
Next Article