For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

13 வயது முதல் 62 பேர் பலாத்காரம்..!! கவுன்சிலிங்கில் தலித் சிறுமி சொன்ன அதிர்ச்சி தகவல்..!! 57 பேர் அதிரடி கைது..!!

Several people took the woman from the Pathanamthitta private bus station to various places and raped her.
07:48 AM Jan 21, 2025 IST | Chella
13 வயது முதல் 62 பேர் பலாத்காரம்     கவுன்சிலிங்கில் தலித் சிறுமி சொன்ன அதிர்ச்சி தகவல்     57 பேர் அதிரடி கைது
Advertisement

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமி, அங்குள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால், இதை கவனித்த குழந்தைகள் நல குழுவினர் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது, தனது 13 வயது முதல் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அச்சிறுமி அதிர்ச்சி அளித்துள்ளார். இதையடுத்து, அவரது புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

விசாரணையில், ”கடந்தாண்டு சிறுமி 12ஆம் வகுப்பு படிக்கும்போது இன்ஸ்டாகிராமில் நெருக்கமான இளைஞர் ஒருவர் அவரை ரப்பர் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவனது நண்பர்கள் 3 பேர் காத்திருந்துள்ளனர். பின்னர், சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பத்தனம்திட்டா தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து அச்சிறுமியை பலர் பல்வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி 5 முறை கும்பல் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்" எனத் தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை கண்காணித்து வரும் மாவட்ட எஸ்பி வி.ஜி.வினோத் குமார் கூறுகையில், இந்த விவகாரத்தில் முதல் வழக்கு இலவம்திட்டா காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 59 பேரில் வெளிநாட்டில் இருக்கும் 2 பேரை தவிர அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 4 காவல் நிலையங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 சிறுவர்களும் அடங்குவர். விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிகையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : மெரினாவை பார்த்து கொந்தளித்துப் போன பசுமை தீர்ப்பாயம்..!! மக்கள் தான் முழு காரணம்..!! இனி லீவு கிடையாது..!!

Tags :
Advertisement