For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மத்திய அரசு வழங்கும் ரூ.6000 தொகை... உங்களிடம் ஆதார் இருந்தால் போதும்...!

09:36 AM May 06, 2024 IST | Vignesh
மத்திய அரசு வழங்கும் ரூ 6000 தொகை    உங்களிடம் ஆதார் இருந்தால் போதும்
Advertisement

மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டு ஒன்றிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000 வீதம்‌ இந்த நிதி உதவி விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.

Advertisement

இந்த திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறும்‌ விவசாயிகள்‌ பி.எம்‌.கிசான்‌ இணையதளத்தில்‌ அல்லது செயலியில்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட மொபைல்‌ எண்ணை இணைப்பது அவசியம்‌ என்பதால், விவசாயிகள்‌ அவர்கள்‌ பகுதிக்கு அருகில்‌ உள்ள அஞ்சலகங்கள்‌, தபால் ஊழியர்கள் மற்றும்‌ கிராம அஞ்சல்‌ ஊழியர்களை அணுகி ஆதார்‌ எண்ணுடன்‌ மொபைல்‌ எண்ணை உடனடியாக இணைத்து பயன்பெற வேண்டும்‌. இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்‌. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணை தொகை வழங்கப்பட்டது. 17வது தவணைத் தொகைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தவணைத் தொகை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் செல்ல வேண்டும். அதில் உள்ளே சென்றதும் FARMERS CORNER என்ற வசதிக்குச் செல்வதன் மூலம், "Know Your Status" என்பதைக் கிளிக் செய்து மேலும் தொடரவும்.

பின்னர் Know Your Registration Number என்ற விருப்பத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணில் OTP வரும். அதை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து புதிய பக்கம் திறக்கும் போது, பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். பின்னர் 'Get Data' என்பதைக் கிளிக் செய்யதால் தவணைத் தொகை பற்றிய முழுமையான தகவலை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement