முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கொத்து கொத்தாக.. கொல்லப்படும் கழுதைகள்.."! தோல் வர்த்தகத்திற்காக 60 லட்சம் கழுதைகள் படுகொலை.! அதிர்ச்சி ரிப்போர்ட்.!

09:19 AM Feb 22, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தோல் வர்த்தகத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் கழுதைகள் கொல்லப்படுகின்றன. கழுதையின் தோல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும், பாரம்பரிய சீன மருத்துவ தீர்வான எஜியாவோவுக்கான இது செய்யப்படுவதாக கழுதை சரணாலயத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்தது.

Advertisement

சீனாவில் தோல் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு செய்யப்படும் மருந்துகளின் மூலப்பொருள், கழுதையின் தோல்களில் இருந்து பெறப்படுகிறது. இதற்கு எஜியாவோ (Ejiao) என்று பெயரிடப்பட்டுள்ளது. கழுதையின் தோலில் இருந்து பெறப்படும் ஜெலட்டினை வைத்து, முகத்திற்கான கிரீம்கள், ரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கான மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக ஆண்டு ஒன்றுக்கு, 59 லட்சம் கழுதைகள் கொல்லப்படுவதாக கழுதைகள் சரணாலயம் தெரிவித்துள்ளது.

2027-ல் இந்த எண்ணிக்கை 67 லட்சத்தை எட்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை மேற்கோள் காட்டி, உலகின் தொழில்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு, இந்த வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கழுதையின் மக்கள் தொகை குறைந்ததால், ஆப்பிரிக்கா போன்ற மற்ற நாடுகளை குறி வைக்கிறது. தங்கள் நாடுகளில் இருக்கும் கழுதைகளை காப்பாற்றுவதற்காக, ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள், தங்களது நாட்டு கழுதைகளை தோலுக்காக வெட்டுவதற்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

பிரேசிலில் உள்ள அட்லாண்டிக்கின் மறுபுறம், கழுதைகள் தோலுக்காக கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றன. 2024 இல் தேசிய காங்கிரஸ் இந்த மனிதாபிமானமற்ற வர்த்தகத்தை நிறுத்துவதற்கு, சட்டங்களை இயற்றும் என்று நம்பப்படுகிறது. பிரேசில் மற்றும் ஆப்பிரிக்கா இந்த வர்த்தகத்தில் இருந்து வெளியேறிவிட்டால், சீனா தனது மருந்துகளை தயாரிக்க, கொடுமையற்ற வேறு மாற்றுகளை கையாளக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.

'தி டான்கி' சரணாலயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரியன்னே ஸ்டீல் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் உலகில் 6 மில்லியன் கழுதைகள் கொல்லப்படுகின்றன. பூமியில் சவாலான சூழ்நிலைகளில் வாழும் மனிதனுக்கு கழுதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அங்கு கழுதையின் இழப்பு பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது" என்று கூறினார். கழுதைகளின் படுகொலையை நிறுத்துவதற்காக, கழுதை சரணாலயத்தின் பிரச்சாரம் 50 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary: A shocking report of 60 lakhs donkeys were killed every year for skin trade.

Read more: https://1newsnation.com/man-attacked-his-wife-and-son-for-not-preparing-mutton-meal-shocking-incident-near-erode/

Tags :
africaAnimal abusebrazilChinadonkeyDonkey sanctuaryEjiao
Advertisement
Next Article