முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிக்கிய திமுக MLA...! 60 % கமிஷன், முதியவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி…...! போட்டுடைத்த அண்ணாமலை...!

06:30 AM Feb 03, 2024 IST | 1newsnationuser2
Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டு, முதியவர் ஒருவருக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை, திமுக எம்.எல.ஏ வில்வநாதன் அபகரிக்க முயற்சித்து, காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தின் தோல் ஏற்றுமதியில் 30 சதவீதம், ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகள் பங்கு வகிக்கின்றன. வாணியம்பாடியில் உள்ள கழிவு நீர் பிரச்சனை, ஆம்பூரிலும் உள்ளது. நீரில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலந்தால், குடிநீர், விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படாத நீராக மாறிவிடும். ஆம்பூர் வாணியம்பாடியில் பாலாற்று கரையில் விவசாயம் செய்வோர் அனைவரையும் விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதில் தான் திமுக அரசு குறியாக இருக்கிறது. போதிய சுத்திகரிப்பு அலைகள் அமைக்கவும், அவை சரியாக செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும் திமுக அரசு தவறிவிட்டது.

ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், கடந்த 2022 - இல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 60% கமிஷன் வேண்டும் என்று கேட்ட காணொளி வெளியானது. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் 50 சதவீதம் தான் வாங்கினாலும், தனக்கு 60 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று உரிமையுடன் கேட்கிறார். இது தான் இவரது மக்கள் பணி. இவர் செய்யும் மற்றொரு பணி, நிலஅபகரிப்பு. கடந்த 2022 ஆம் ஆண்டு, ஒரு முதியவருக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை, வில்வநாதன் அபகரிக்க முயற்சித்து, காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, அந்த முதியவர் தீக்குளிக்க முயற்சித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மகேஷ் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கட்டாயப்படுத்தி வாங்கினார் என இவரது நில அபகரிப்புப் பணிகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. திமுக மூத்த தலைவர் துரை முருகன் அவர்களின் மகன் என்பதைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாதவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த். இந்த இருவரும் மக்களுக்காக எந்தப் பணிகளுமே செய்ததில்லை என கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அரசு பணிகளில் மொத்தம் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தனர். தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் சிறுபான்மையினர்.

பிரதமரின் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறுவோரில் 33 சதவீதம் பேர் சிறுபான்மையினர். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயன்பெறுவோரில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர் என, காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியை விட, நமது பாரதப் பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்கள், சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன என்றார்.

Tags :
AmburannamalaiDmkdmk mla
Advertisement
Next Article