வெளியாகும் அதிர்ச்சி காரணங்கள்: 2018ல் காலாவதியான வாகனச் சான்றிதழ்..! குடித்துவிட்டு பேருந்தை இயக்கிய டிரைவர்..! 6 மாணவர்கள் பலி..!
Accident: ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப்பேருந்து விபத்துள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர் மாவட்டத்தில் GRL பப்ளிக் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் பேருந்து ஒன்று, நேற்று 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்றுள்ளது. நாடு முழுக்க ரம்ஜான் பொதுவிடுமுறை அமலில் உள்ள நிலையில், இப்பள்ளி மட்டும் செயல்பட்டுள்ளது. சுமார் 40 குழந்தைகள் பேருந்தில் பயணித்துள்ளனர். பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் பேருந்தில் பயணித்த 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் நன்றாக போதையில் இருந்தபடியே பேருந்து ஓட்டினார் என நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
பேருந்து சரியாக இருக்கிறது என்பதற்கான சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன் 2018-ம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டது என போலீசார் தெரிவித்தனர். ரமலானை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி திறந்திருப்பதற்கான காரணம் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்காக விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சர் சீமா திரிகா கூறியுள்ளார்.
Readmore: குட்நியூஸ்!… இந்தியர்களுக்கு ஜாக்பாட்!… 5 லட்சம் வேலைவாய்ப்பு!… மாஸ்காட்டும் ஆப்பிள் நிறுவனம்!