For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tn govt: 6 மாவட்ட வெள்ள பாதிப்பு... பொதுமக்கள் கடன் பெற கால அவகாசம் நீட்டிப்பு...! முழு விவரம்

06:42 AM Mar 02, 2024 IST | 1newsnationuser2
tn govt  6 மாவட்ட வெள்ள பாதிப்பு    பொதுமக்கள் கடன் பெற கால அவகாசம் நீட்டிப்பு     முழு விவரம்
Advertisement

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்புக் கடனை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புகளுக்கு உள்ளானது. அதே போல தென் மாவட்டத்தின் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ங்களும் பாதிப்புக்கு உள்ளானது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகின. பலர் உயிரிழந்ததோடு, கால்நடைகள், வீடுகள், அனைத்தும் பதிப்படைந்தது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், “வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்காக ரூ.385 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 4,577 புதிய வீடுகள், 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் பயிர்ச்சேதத்திற்கு ரூ.250 கோடி நிவாரணம் தரப்படும்.

பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.3000 நிவாரணம் வழங்கப்படும், சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் திட்டம், வீடுகளை புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பலவற்றை உள்ளடக்கி ரூ.1000 கோடிக்கான நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்புக் கடனை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூ‌.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கால அவகாசம் முடிந்த பின்னரும் ரூ.51.26 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருப்பதால் ரூ.100 கோடியும் வழங்கப்படும் வரை இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement