6-6-6 வாக்கிங் ரூல்.. உடல் எடையை குறைக்க ஈஸியான வழி இதுதான்!
வேகமான வாழ்க்கை முறை, மோசமான உணவுப்பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இன்று உடல் பருமன் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எப்படியாவது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காக கடுமையான டயட், உடற்பயிற்சி முறைகளை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள முடியும்.
நடைபயிற்சி என்பது எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. தற்போது '6-6-6 நடைபயிற்சி விதி' மிகவும் பிரபலமாகி வருகிறது. அது என்ன 6-6-6 விதி? அதாவது, காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு 60 நிமிட நடைபயிற்சி செய்ய வேண்டும்., இதில் 6 நிமிட வார்ம்-அப் மற்றும் 6 நிமிட கூல்-டவுன் அடங்கும். இந்த நடைமுறையானது உடற்தகுதியை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு இந்த நடைபயிற்சி மேற்கொள்ளவும் எளிதானது.
காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. அதே போல் மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது வேலை அழுத்தத்தை தணித்து உடலை ரிலாக்ஸ் ஆக மாற்றுகிறது.. மேலும், 6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் உடலை காயத்திலிருந்து பாதுகாத்து மீட்க உதவுகிறது.
உங்கள் தினசரி வழக்கத்தில் நடைபயிற்சியை எப்படி சேர்ப்பது?
காலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் உங்கள் நடைபயிற்சியை அவசரமின்றி முடிக்க முடியும். மாலையில் வேலையை முடித்த பிறகு அல்லது இரவு உணவிற்கு முன், இந்த நடைபயிற்சியை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். நடைபயிற்சி செய்யும் போது வானிலைக்கு ஏற்ற லேசான மற்றும் வசதியான ஆடைகளை அணியுங்கள்.
6 நிமிட வார்ம்-அப் உங்கள் தசைகளை செயல்படுத்தி இதயத்துடிப்பை படிப்படியாக அதிகரிக்கிறது. மேலும் லேசான ஸ்ட்ரெட்ச் செய்து மெதுவாக நடப்பது நல்லது. இது இதயத் துடிப்பை இயல்பாக்குகிறது, தசைகளையும் வலுப்படுத்துகிறது.
நடைபயிற்சியினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
வழக்கமான நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
இது கலோரிகளை எரிக்க உதவுகிறது, எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக மாலை நடைப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
உடல் மற்றும் மன சோர்வு நீங்கி, நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். இதனால் தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.