முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

6 மீனவர்கள் கைது... மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

05:30 AM Jan 25, 2024 IST | 1newsnationuser2
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தில்; மீன்பிடிக்க 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22-ல் கைது செய்துள்ளனர். இத்தகைய போக்கு, பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பறிப்பதுடன், மீனவ மக்களிடம் அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது. மீனவ சமூகங்களின் கலாச்சார, பொருளாதார கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா - இலங்கை இடையே கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்கவும், இந்திய மீனவர் - இலங்கை கடற்படையினர் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கை குழுவை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
central ministerFishermanJai sankarmk stalin
Advertisement
Next Article