For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

படிக்க வந்த 15 வயது சிறுமி! படுக்கைக்கு அழைத்த 59 வயது உறவினர்… பாய்ந்த போக்சோ சட்டம்.!

03:23 PM Nov 22, 2023 IST | 1Newsnation_Admin
படிக்க வந்த 15 வயது சிறுமி  படுக்கைக்கு அழைத்த 59 வயது உறவினர்… பாய்ந்த போக்சோ சட்டம்
Advertisement

வீட்டிற்கு படிக்க வந்த சிறுமியை 59 வயது நபர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயதான கந்தசாமி. இவர் மின்சார வாரியத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் இவர், நிலக்கோட்டையில் உள்ள இபி காலணியில் தங்கி வந்துள்ளார். இவரது வீட்டில், இவர்களது உறவினரின் 15 வயது மகள் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு கந்தசாமி அந்த 15 வயது மாணவியிடம் அத்துமீறியதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த சிறுமி காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி மின்வாரிய ஊழியர் கந்தசாமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். காவல்துறையின் விசாரணையில் கந்தசாமி சிறுமியிடம் அத்துமீறியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர் கந்தசாமி கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தங்கள் வீட்டிற்கு படிக்க வந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் முதியவர் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement