வீட்டில் இருந்து கேட்ட முனங்கள் சத்தம், வாடகைக்கு வீடு எடுத்து 57 வயது ஆன்டி செய்த காரியம்..
சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2) போலீசாருக்கு எம்.ஜி.ஆர். நகரில் விபச்சார தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெருவிற்கு சென்றுள்ளனர். பின்பு, அங்குள்ள வீடு ஒன்றை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, அந்த வீட்டில் பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடபது உறுதியானது.
இதையடுத்து, பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் அந்த வீட்டிற்க்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாலியல் தொழில் நடத்தியது யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் படி, பாலியல் தொழில் செய்து வந்தது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம், மேடவாக்கம் ஜல்லடியன் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவியான 57 வயதான ரெஜினாவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரெஜினா வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்ட ரெஜினாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர், ரெஜினாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி ரெஜினா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட, போலீசாரால் மீட்கப்பட்ட வெளிமாநிலப் பெண், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Read more: “நடிகர் சிவாஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை, இப்போ வர என்னால மறக்க முடியல” நடிகை லட்சுமி அளித்த தகவல்..