முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகம் முழுவதும்... மாற்றுதிறனாளிகளின் எளிதில் பயண்படுத்தும் வகையில் 552 புதிய பேருந்து...!

08:39 AM Dec 18, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் உத்தரவின்படி ரூ.500.97 கோடி மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (சென்னை மாநகர போக்குவரத்துகழகம் 352. கோயம்புத்தூர்-100. மதுரை- 100) மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Govt busPhysically challengedSivasankarTNSTC
Advertisement
Next Article