அடேங்கப்பா.. "ஒரு பெயிண்டிங் ரூ.448 கோடியா..!" '100' ஆண்டுகளுக்கு முன் தொலைந்த ஓவியம்.! ஆஸ்திரிய நாட்டில் கண்டுபிடிப்பு.!
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனதாக நம்பப்படுகின்ற, புகழ்பெற்ற ஆஸ்திரிய கலைஞர் வரைந்த ஓவியம், வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி வியட்னாவின் ஏல இல்லம் 'இம் கின்ஸ்கி'யால் ஏலம் விடப்பட உள்ளது.
புகழ்பெற்ற ஆஸ்திரிய கலைஞர் குஸ்டவ் க்லிம்ட், வரைந்த "போர்ட்ரெய்ட் ஆஃப் ஃபிராலின் லீஸர்" எனப்படும் ஓவியம் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்ததாக நம்பப்படுகிறது. அந்த ஓவியம் தற்போது ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் யூத குடும்பத்தை சேர்ந்த இந்த ஓவியம் கடைசியாக 1925ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த ஓவியத்தை வைத்திருந்தவர்களின் விபரங்கள் தெரியவில்லை. பின்னர் 1960 முதல் இந்த ஓவியம் தற்போதைய உரிமையாளர்களிடமே இருந்தது.
இம் கின்ஸ்கி என்ற ஏல நிறுவனம் இதன் மதிப்பு $54 மில்லியன் என்று கணக்கிட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு 448 கோடி ரூபாயாகும். இந்த ஓவியம் திரும்ப கிடைத்த நிகழ்வை கலை உலகின் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர்.
இம் கின்ஸ்கியின் கூற்றுப்படி, குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் வரைந்த வெற்றிகரமான பெண்களின் புகைப்படங்கள் சர்வதேச அரங்கில் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் வரைந்த பெண்களின் புகைப்படங்கள் சற்று அரிதாகவே ஏலத்தில் கிடைக்கின்றன.
வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி, ஃபிராலின் லீசரின் உருவப்படம், வியன்னாவில் உள்ள இம் கின்ஸ்கி இல்லத்தில் சிறப்பு ஏலத்தில் வைக்கப்படும். அதற்கு முன்பு அது உலகெங்கும் பயணிக்கும். சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரிட்டன் மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் இது காட்சிக்கு வைக்கப்படும். பின்னர் குறிப்பிட்ட தேதியில் வியன்னாவில் இது ஏலத்தில் விடப்படும்.