For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

23 லட்சம் ரூபாய் DUCATI பைக்…! சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி..!

05:33 PM May 01, 2024 IST | shyamala
23 லட்சம் ரூபாய் ducati பைக்…  சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி
Advertisement

நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு, அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி சர்ப்ரைஸ் கிப்ட் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், துணிவு படத்தை தொடர்ந்து, விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், அஜித் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி, அவருக்கு பிடித்தமான பொருளை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அஜித்திற்கு நடிப்பதை தாண்டி பைக்கில் ரைடு போவது ரொம்பவே பிடித்த விஷயம். பைக் என்றாலே அஜித் ஒரு குழந்தை போல மாறிவிடுவார் என பல பிரபலங்கள் கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த நிலையில், அஜித்தின் பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கும் விதமாக ஷாலினி டுகாட்டி மாடல் பைக் ஒன்றை கிப்டாக கொடுத்துள்ளார்.

அஜித்திற்கு ஷாலினி கொடுத்துள்ள அந்த பைக் DUCATI MULTISTRADA V4 என்ற மாடல் ஆகும். இந்த  பைக்கின் விலை கிட்டத்தட்ட 23 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. அஜித்திற்கு அவர் கிப்ட் -ஆக கொடுத்துள்ள அந்த பைக்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, படம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், லைக்கா நிறுவனம் வாழ்த்து போஸ்டர் ஒன்றை மட்டும் வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய பிரபலம்.. 2 தேசிய விருதுகளை வென்றது!

Advertisement