Lok Sabha 2024| அதிமுக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை.! விரைவில் வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு அதன் கூட்டணி கட்சிகள் உடன் சுமுகமாக தொகுதி பங்கீட்டை முடித்துக் கொண்டது. ஆனால் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வழங்கும் அதிமுக கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிமுக மற்றும் பாமக கட்சிகள் ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் வைத்து பாமக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாமக சார்பாக அந்த கட்சியின் எம்எல்ஏ அருள் ஈடுபட்டு வருகிறார். இந்த பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தால் அதிமுக மற்றும் பாமக இடையே கூட்டணி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைவதை விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்நிலையில் பாமகவின் கூட்டணி பற்றிய அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.