52 வயது ஆண்டிக்கு, இளம்பெண் மீது ஏற்பட்ட மோகம்.. ஆசையை அடக்க முடியாமல் அவர் செய்த காரியத்தால் பரபரப்பு..
கேரள மாநிலம் கோழிக்கோடு மீன் சந்தை பகுதியில், 52 வயதான ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். இளம்பெண்ணும் ஜெயஸ்ரீ உடன் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களின் பிரச்சனைகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், ஜெயஸ்ரீ இளம்பெண்ணை தனது வீட்டிற்க்கு வருமாறு அழைத்துள்ளார். ஜெயஸ்ரீ மீது துளியும் சந்தேகம் இல்லாத இளம்பெண் ஜெயஸ்ரீ வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
அங்கு ஜெயஸ்ரீக்கு இளம்பெண் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இளம்பெண்ணை லெஸ்பியன் உறவில் ஈடுபட வற்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபஅடைந்த இளம்பெண், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெயஸ்ரீயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி வழங்கினார். அந்த தீர்ப்பின் படி, ஜெயஸ்ரீக்கு 33 வருடம் கடுங்காவல் சிறையும், ₹55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.