For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CSK : சொந்த மண்ணில் 50வது வெற்றி!! மைதானத்தில் ரசிகர்களுடன் கொண்டாடிய சிஎஸ்கே நிர்வாகம்!

07:30 AM May 13, 2024 IST | Baskar
csk   சொந்த மண்ணில் 50வது வெற்றி   மைதானத்தில் ரசிகர்களுடன் கொண்டாடிய சிஎஸ்கே நிர்வாகம்
Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் 50 வெற்றிகளை பதிவு செய்த 3வது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

Advertisement

CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. சொந்த மண்ணில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த மூன்றாவது அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

இந்த நிலையில் சேப்பாக்கத்தில் 50ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுவரை சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 52 வெற்றிகளும், மும்பை இந்தியன்ஸ் - 52 வெற்றிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் - 50 வெற்றிகளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 42 வெற்றிகளும் ராஜஸ்தான் ராயல்ஸ் - 37 வெற்றிகளும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: சொகுசு கார்… அதுவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல்துறை வாகனமாம்…..

Advertisement