For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அட்டகாசம்..! பேருந்தில் பயணம் செய்ய 50,000 இலவச "சிங்கார சென்னை" ஸ்மார்ட் கார்டு...! உடனே முந்துங்கள்

50,000 free 'Singara Chennai' smart card for bus travel..
07:12 AM Jan 07, 2025 IST | Vignesh
அட்டகாசம்    பேருந்தில் பயணம் செய்ய 50 000 இலவச  சிங்கார சென்னை  ஸ்மார்ட் கார்டு     உடனே முந்துங்கள்
Advertisement

சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம். இந்த அட்டையை சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.

Advertisement

இத்திட்டத்தின் முதல்கட்டமாக, 50 ஆயிரம் அட்டைகள் எஸ்பிஐ மூலம் கட்டணமின்றி வழங்கப்படும். இந்த அட்டைகள் கோயம்பேடு, பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓடி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களில் கட்டணமின்றி வழங்கப்படும். இந்த அட்டைகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கார்டை மெட்ரோ நிலையம், மின்சார ரயில்களில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீசார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Tags :
Advertisement