For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிசம்பர் 31: 500 வருடங்களுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் பெயர்ச்சி.! ஜாக்பாட் அடிக்க இருக்கும் ராசிகள்.!

06:20 AM Dec 21, 2023 IST | 1newsnationuser4
டிசம்பர் 31  500 வருடங்களுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் பெயர்ச்சி   ஜாக்பாட் அடிக்க இருக்கும் ராசிகள்
Advertisement

ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது நல்ல விஷயமாகவும் அமையலாம் துர்பாக்கியமாகவும் அமையலாம். இந்த வருடத்தின் கடைசி நாளான 31ம் தேதி மிகப்பெரிய ராசி மாற்றம் நடைபெற இருக்கிறது. இதனை ராஜ யோகம் என்று ஜோதிடர்கள் அழைக்கின்றனர். மேலும் இந்த ராசி மாற்றம் 500 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு எனவும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

ஜோதிட சாஸ்திரங்களில் படி வியாழன் தேவகுரு என அழைக்கப்படுகிறது. வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வியாழன் கிரகம் மேஷ ராசிக்கு இடம்பெயர இருக்கிறது. இது 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த ராஜயோகத்தால் பல ராசிகளின் வாழ்க்கையே மாற இருக்கிறது. இந்த ராஜ யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல பலன்களை அள்ளிக் கொடுக்கிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு கல்வி தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை வளமுடன் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடும். நிறைவேறாமல் இருக்கும் பணிகள் உடனடியாக நிறைவடையும். இந்த ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல பிரச்சினைகள் நீங்கும் கடன் தொல்லைகள் நீங்குவதோடு தடைபட்ட திருமணங்களும் கை கூட வாய்ப்பிருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் வெற்றியும் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கு வாய்ப்பு இருக்கிறது.

கடக ராசிக்காரர்களுக்கு நிதி அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண தடைகள் நீங்கும். தொழில் வளம் செழிக்கும் . கடன் பிரச்சினைகள் தீரும் . உழைப்புக்கு ஏற்ற உயர்வு வாழ்வில் தேடி வரும். மீனம் ராசிக்காரர்களுக்கு கல்வி மற்றும் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் . புதிய வாய்ப்புகள் தேடி வரும். அனைத்து நிதி பிரச்சனைகளும் தீரும். தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதோடு சமூக அந்தஸ்து உயரும்.

Tags :
Advertisement