மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்..!! அமைச்சரவையில் வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்..!!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 8ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், மதுக்கடைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 நகர்புற உள்ளாட்சி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என வரிசையாக திமுக வெற்றி பெற்று வந்தாலும், 2026 சட்டமன்ற தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். அதற்கு முக்கிய காரணம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றொன்று டாஸ்மாக் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரம்.
என்னதான் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை என பல திட்டங்களை திமுக அரசு அறிவித்தாலும், டாஸ்மாக் விற்பனை விவகாரம், அவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், அரசின் திட்டங்களில் வரும் பணம் எல்லாம், டாஸ்மாக்கிற்கே செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே 2015ஆம் ஆண்டு அதிமுக சந்தித்த அதே பிரச்சனையை திமுக தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.
தேர்தல் நேரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் டாஸ்மாக் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை கடுமையான தாக்க வாய்ப்புள்ளது. தற்போதே தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகவும், போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கவும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுகவின் கூட்டணி கட்சிகளே வாயை திறந்து எதிர்க்க ஆரம்பித்துவிட்டன. எனவே இந்த, விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அதாவது, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 8ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தான், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாம். அவ்வாறு முடிவு செய்யப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,329 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் 6,828 டாஸ்மாக் கடைகள் இருந்தன. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, அதிமுக இரண்டு கட்டங்களாக ஆயிரம் மதுக்கடைகளை மூடின.
திமுக ஆட்சியில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதுபோக பொதுமக்கள் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக சுமார் 300 முதல் 400 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டுமே உள்ளன. இதுதவிர ஒவ்வொரு பெரிய ஊரிலும் தனியாருக்கு மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார் என மதுபான விநியோகிக்கும் கடைகள் உள்ளன.
எனவே, மதுக்கடைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், மேலும் 500 கடைகளை மூட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Read More : பெரும் சோகம்..!! ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!! 100-ஐ தாண்டும் பலி எண்ணிக்கை..!!