மகிழ்ச்சி...! அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு....!
தமிழகத்தில் MD, MS முதுநிலை மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2024-25 கல்வியாண்டில், பொது, குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு உள்ளிட்ட 9 துறைகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற துறைகளுக்கான இடஒதுக்கீட்டை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியுள்ள அரசு, 50% இடஒதுக்கீடு பற்றி ஆண்டுதோறும் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் படிக்க 50% உள் ஒதுக்கீடு இடங்கள் நிறுத்தி வைப்பதாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு மருத்துவ பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் படிக்க 50% இடங்கள் உள் ஒதுக்கீடாக நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்ட சில துறைகளில் பணியிடங்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி 2024-2025 வருடம் முதல் இந்த ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை எண் 151-ஐ மருத்துவத் துறை வெளியிட்டிருக்கிறது.
ஆனால் அவர்கள் குறிப்பிடும் துறைகளில் தேசிய மருத்துவ ஆணைய இளநிலை, முதுநிலை படிப்புகள் நடத்த தேவையான UG அல்லது PG Minimum Standard Requirements 2023 விதிகளின் படி ஒவ்வொரு துறையிலும் சுமார் 100 பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.தேசிய மருத்துவ ஆணையம் MSR 2023 இளநிலை,முதுநிலை படிப்புகள் நடத்த தேவையான குறைந்த பட்ச அளவு மட்டும் தான். ஆனால், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலும் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது.
ஆனால் தேவையான பணியிடங்களே உருவாக்காமல் செயற்கையாக மிகையான தோற்றம் உருவாகி வருகிறது என சொல்லி குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்கள் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு தர மறுப்பது எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட பிற்போக்கான நடவடிக்கை ஆகும். இதனை அரசு உடனடியாக திரும்ப பெற்று விதிகளின் படி தேவைப்படும் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.