முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீடு வாங்க ஒருவருக்கு ரூ.1.50 லட்சம்... 5 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன்...! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு...!

06:29 AM Nov 13, 2023 IST | 1newsnationuser2
Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ஒருவருக்கு அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும், வட்டியில்லா கடனாக வழங்க, 1.20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தும், வட்டி தொகையை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக செலுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது

Advertisement

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில், பல் வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகள் வாங்கும் போது, பயனாளியின் பங்கு தொகையாக, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதற்காக ஆண்டுக்கு, 1,000 நபருக்கு, வட்டியில்லா வங்கி கடன் உதவி வழங்கும் செயல்படுத்த உள்ளதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.

எனவே பயனாளிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகைக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ஒருவருக்கு அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும், வட்டியில்லா கடனாக வழங்க, 1.20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தும், வட்டி தொகையை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக செலுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement
Next Article