குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 5 திருநங்கைகள்...! காவல்துறை அதிரடி கைது...!
சென்னை எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த 5 திருநங்கைகளை கைது செய்தது தாம்பரம் போலீஸ்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் கண்காணித்து வந்தபோது, 02.02.2024 -ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு எழில் நகர், பெரும்பாக்கம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது எண். 1/9. R Block, எழில் நகர், பெரும்பாக்கம் என்ற வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த ஐந்து திருநங்கைகளை கைது செய்து, அவ்விடத்தில் சோதனை செய்ததில் அங்கு ரூபாய் ஆறு லட்சம் மதிப்புள்ள, 60 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. இந்த கஞ்சாவினை அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து வாங்கிவந்து எழில் நகர், செம்மஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனை செய்து வந்ததாக கூறினர்.
பின்பு அந்த கஞ்சாவை கைப்பற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கைப்பற்றப்பட்டது. இது சம்மந்தமாக T16 செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.