For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

லோ பட்ஜெட்ல தேனியில் சுற்றிபார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!

Here is a list of top five places in Theni Gampam area that are the best choice for a great family vacation experience at a low cost!
12:21 PM Jun 14, 2024 IST | Mari Thangam
லோ பட்ஜெட்ல தேனியில் சுற்றிபார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்
Advertisement

நம் தமிழநாட்டில் இயற்கையான  சுற்றுலா தலங்களின் எண்ணிக்கை  ஏராளம். அந்த வரிசையில் இயற்கை மற்றும் விவசாயத்திற்குப் புகழ்பெற்ற இடங்களாக இருப்பது கம்பமும் தேனியும். குறைந்த செலவில் குடும்பத்தோடு சிறப்பான சுற்றுலா அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த தேர்வாக இருக்கும் தேனி கம்பம் பகுதியின் முக்கிய ஐந்து இடங்களின் பட்டியல் இதோ!

Advertisement

சேரன்ஸ் பூங்கா

சேரன்ஸ் பூங்கா தேனியில் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. மேலும், இது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட சிறந்த இடமாகும் ஏனெனில் இங்கு பல  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதி, வீடியோ கேம்கள், படகு சவாரி, திறந்தவெளி திரைப்படக் காட்சிப் பகுதி மற்றும் பல பொழுதுபோக்கு சிறப்பம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இங்கு  100க்கும் அதிகமான அரிய வகை மீன்கள் வசிக்கும் ‘அக்வா கேவ்’ என்ற இடமும் உள்ளது.

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி தேவதானப்பட்டி வனச் சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு வட்டக்கானல், கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாகக் கொட்டுகிறதுவருடந்தோறும் மக்கள் இங்கு கூட்டம்கூட்டமாக வந்து தங்களுடைய கோடை விடுமுறையை அருவியில் நீராடியவாறு கழித்துவிட்டு செல்கின்றனர்.

சுருளி அருவி

முதல் அருவியில் 140 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. அதேபோல இரண்டாவது அருவியில் 50 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. இந்த இடத்தில் மக்கள் குளிப்பதற்கு என பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் தைரியமாக குளிக்கலாம். ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த அருவியில் தண்ணீர் போதுமான அளவுக்கு வரும். அதேபோல இந்த இடத்தில் சுருளி வேலப்பர் கோயில் மற்றும் தர்கா என இரண்டு வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன.

மேகமலை

சுருளி அருவிக்கு அடுத்து காண வேண்டிய மிக முக்கியமான இடம் மேகமலை. பெயர் மட்டும்தான் மலை. ஆனால் இது அமைந்துள்ள இடம் ஒரளவுக்கு சமவெளியான பகுதிதான். யற்கையான பசுமை நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் குளிர்ந்த காற்று சொல்லும்  மேகமலையின் அழகை. இங்கு பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்பு, அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலைத்தோட்டங்கள், காபி பயிர்த் தோட்டங்கள், உயரமான மலைகள், ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம்தான் மேகமலை. கோடை விடுமுறைகளில் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல சிறந்த இடமாக நீங்கள் இதனை தேர்வு செய்துகொள்ளலாம்.

தேனி சின்னமனூரிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது. 5 மலை சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் மேகமலை கோடை காலத்தை இனிமையாக கழிக்க ஏற்ற இடம்தான். ஏராளமான அரிய வகை உயிரினங்கள், நீர் நிலைகள், குளுமையான கால நிலையம் என அனைத்தும் நிச்சயம் நம்மை மெய்மறக்க செய்துவிடும்.

இங்கு ஏராளமான காட்டு உயிரினங்கள் இருப்பதால் இந்த இடத்தில் சரணாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புலி, சிறுத்தை, யானை தொடங்கி, புள்ளி புறா, வெள்ளை வயிறு மரங்கொத்தி என பல்வேறு உயிரினங்களை நம்மால் இங்கு காண முடியும்.

குரங்கணி மலை

மலையேற்றம் செய்ய விரும்புவோருக்கு இது ஒரு சொர்க்கமாகும். போடிநாயக்கனூரிலிருந்து 12 கி.மீ சென்றால் குரங்கணியின் அடிவாரத்தை அடைந்துவிடலாம். இங்கு சுமார் 6 சிற்றோடைகள் இருக்கின்றன. ஒருபக்கம் கொல்லிமலையும், மறுபக்கம் குரங்கணி மலையும் நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடும்.

இந்த மலை வழியாக நடந்து சென்றால் அப்படியே கேரளாவின் மூணாறுக்கு சென்றுவிடலாம். குரங்கணியிலிருந்து சுமார் 12 கி.மீ நடந்து சென்றால் டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட் வந்துவிடும். தேயிலை தோட்டம், அடர்த்தியான மரங்கள் என இந்த இடம் நிச்சயம் மனநிறைவை கொடுத்துவிடும். அதேபோல குழந்தைகளுக்கு ஏற்ற இடம் சேரனின் வேடிக்கை பூங்கா என்றால் அது மிகையாகாது. குழந்தைகள் பூங்கா, படகு சவாரி என குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த அனைத்தும் இங்கு இருக்கிறது.

Read more ; நான் முதல்வன் திட்டத்தில் இத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதா..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்..!!

Tags :
Advertisement