9 நிமிடங்களில் 5 முறை!… அடுத்தடுத்து பூமியை குலுக்கிய நிலநடுக்கங்கள்!… பீதியில் மக்கள்!
Earthquake: தைவானில் 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தைவான் நாட்டின் கிழக்கு ஹுவாலியன் (Hualien) கவுண்டியை மையமாக கொண்டு நேற்றுமாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
குறிப்பாக, திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை தைவானின் கிழக்கு கடற்கரையில் 6.3 ரிக்டர் அளவில் 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தீவின் வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இது கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு பேரழிவு நிலநடுக்கத்தின் மையப்பகுதி தான் இந்த Hualien.இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் இருந்து மீளாத மக்களுக்கு ஒரே மாதத்தில் 2வது நிலநடுக்கம் என்பதும் பெரும் அதிர்ச்சி கலந்த பயத்தை கொடுத்துள்ளது.
இதேபோல், 2016 இல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர், அதே நேரத்தில் 1999 இல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
Readmore: 2024 பத்ம விருதுகள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!