2024-ல் தங்கள் கடைசி ஐபிஎல் விளையாடும் 5 வீரர்கள்!… யார்? யார் தெரியுமா?
நீண்ட காலமாக விளையாடி வரும் சில மூத்த வீரர்களுக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாகவும் கூட அமையும். இந்தநிலையில், 2024 இல் தங்கள் கடைசி ஐபிஎல் விளையாடக்கூடிய ஐந்து வீரர்களை பார்ப்போம்.
ஆண்டுதோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும், ஐபிஎல் டிரேட் முறையில் வீரர்களை ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நீண்ட காலமாக விளையாடி வரும் சில மூத்த வீரர்களுக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாகவும் கூட அமையும். இந்தநிலையில், 2024 இல் தங்கள் கடைசி ஐபிஎல் விளையாடக்கூடிய ஐந்து வீரர்களை பார்ப்போம். RCB கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்,தனது வயதைக் கருத்தில் கொண்டு தனது கடைசி ஐபிஎல் சீசனில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2022 இல் RCB பிளேஆஃப்களை அடைய உதவியதன் மூலம் டு பிளெஸ்ஸிஸ் கேப்டனாக ஒரு கெளரவமான இடத்தை வகித்து வருகிறார். 2023 இல் விராட் கோலி கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் சதம் அடித்த போதிலும் கடைசி நேரத்தில் அவர்கள் பிளேஆஃப் இடத்தைத் தவறவிட்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தற்போது இந்திய அணிக்காக விளையாடுவதற்குப் போட்டியில்லை. ஆனால், 38 வயது காரணமாக அவர், இந்த 2024 ஐபிஎல் சீசனில் கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூடும் என்று ஐபிஎல் வட்டாரங்கல் கூறுகின்றன. இதேபோல், குஜராத் அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான விருத்திமான் சஹா, 2022 இல் அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இந்தநிலையில், 39 வயதான இவருக்கும் இந்த சீசன் கடைசி வாய்ப்பாக அமையலாம் என்றும், 2025ம் ஆண்டு சீசனி எந்த அணியினரும் இவரை எடுக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
தினேஷ் கார்த்திக்: ஆர்சிபி அணிக்காக 2022 ஐபிஎல் சீசனில் ஒரு சிறந்த ஃபினிஷராக விளங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், சீரற்ற தன்மை மற்றும் தொடர் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் கடந்த சீசனில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால், 2024ல் சீசனில் RCB அவரை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே அவரது கடைசி ஐபிஎல் சீசனாக கூட இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் அணியின் தலைமகன் தோனி. 2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. 5 முறை ரன்னர்-அப்பாக சீசனை நிறைவு செய்து உள்ளது. 2 முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த தருணங்கள் அனைத்திலும் சென்னை அணியை வழிநடத்தியது தோனி. ஆனால், CSK ரசிகர்களுக்கு இந்த சீசன் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கலாம்.
ஏனெனில் தோனி ஐபிஎல்லில் விளையாடுவது இந்த சீசனுடன் கடைசியாக இருக்கலாம். இந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி விளையாடவில்லை என்றால், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் அவரது இருப்பை இழக்க நேரிடும். கேப்டனாக உலக கிரிக்கெட்டில் பட்டங்களை வெல்லும் போது தோனிக்கு ஒரு பழம்பெரும் அந்தஸ்து கிடைத்துள்ளது, எனவே இந்த சிஎஸ்கே உரிமையை வழிநடத்துவதில் அவருக்கு அடுத்தப்படியாக கேப்டனாக யார் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.