நாட்டில் 5 பேருக்கு மரண தண்டனை!. பழங்குடியின சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி!.
Death penalty: கடந்த 2021ம் ஆண்டு 2 பேரை கொலை செய்துவிட்டு பழங்குடியின சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சத்தீஸ்கர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் கதுபிரோடா கிராமத்தை சேர்ந்தவர் சந்த்ராம் மஞ்ச்வார் (49). இவரிடம் 60 வயது முதியவர் தனது குடும்பத்துடன் ஆடு, மாடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். முதியவரின் குடும்பத்தில் உள்ள 16 வயது சிறுமியை 2வது திருமணம் செய்து கொள்ள சந்த்ராம் விருப்பப்பட்டதாகவும், இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்த்ராம் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து, முதியவரையும், 4 வயது குழந்தையையும் கொலை செய்துவிட்டு, 16 வயது சிறுமியை கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, காட்டுப்பகுதிக்குள் சிறுமியை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து, இறந்த முதியவரின் மகன் தனது குடும்பத்தினரை காணவில்லை என லெம்ரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தன. பாதிக்கப்பட்ட அந்த குடும்பம், பஹாடி கோர்வா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உடனடியாக போலீசார், சந்த்ராம் மஞ்ச்வார் உட்பட 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோர்பா மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி மம்தா போஜ்வானி, குற்றவாளிகள் 5 பேருக்கும் மரண தண்டனையும், ஆறாவது குற்றவாளியான உமாசங்கர் யாதவ் (26) மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரைக் கொன்று, சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் "மிகவும் வக்கிரமானது மற்றும் கொடூரமானது" என்று நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களது இச்சையை திருப்திப்படுத்திக்கொள்ளும் நோக்கத்திற்காக மூன்று அப்பாவிகளை கொலைசெய்துள்ளனர். இது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது" என்று நீதிபதி கூறினார். எனவே, இந்த நீதிமன்றத்திற்கு ஆயுள் தண்டனை என்ற பொது விதிக்குப் பதிலாக மரண தண்டனை விதிவிலக்கைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.
Readmore: 50 அடி பள்ளத்தில் மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து!. 14 பேர் பலியான சோகம்!. கர்நாடகாவில் பயங்கரம்!