நோட்...! இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்...!
எல்பிஜி சிலிண்டரின் விலை, ஓட்டுநர் உரிமம், பான் - ஆதார் இணைப்பு உள்ளிட்ட 5 முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் உரிமம் பெற சோதனை நடைமுறை குறிப்பிடத்தக்க மாற்றங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, விண்ணப்பதாரர்கள் இப்போது அங்கீகாரம் பெற்ற தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் ஓட்டுநர் உரிமம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.
வங்கிகள் விடுமுறை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் வங்கிகள் 10 நாட்களுக்கு மூடப்படும். இதில் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும்.
சிலிண்டர் விலை உயர்வு: எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தில், இந்த நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன, மேலும் ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலையை மீண்டும் குறைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் போலவே, ஜூன் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பான் ஆதார் இணைப்பு: இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பலர் இன்னும் தங்களது பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காமல் உள்ளனர். ஒருவேளை நீங்கள் 2024 மே 31-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைத்து இருக்க வேண்டும் . இணைக்க தவறிய நபர்களுக்கு இன்று முதல் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம்: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது.