அலர்ஜியை உண்டாக்கும் 5 உணவுகள்..!! கட்டாயம் இதை தொடாதீங்க..!! மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!!
நமது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களில் ஒரு சிலருக்கு சில உணவுகள் மீது அலர்ஜி இருக்கும். ஹோட்டலில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது சில உணவுகளை இவர்கள் தவிர்த்துவிடுவார்கள். அதையும் மீறி அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தால், மறுநாளே அவர்களுக்கு தோல் அரிப்பும், வாந்தியும், பிற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும்.
இப்படி நம் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பல உணவுகள் இருக்கின்றன. ஆகவே, எது நமக்கு அலர்ஜியான உணவு என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அந்தவகையில், நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் பொதுவான அலர்ஜி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிடிக்காத உணவு Vs அலர்ஜியான உணவு :
சில உணவுகள் உங்களுக்கு பிடிக்காதவையாக இருக்கும். சில உணவுகள் உங்களுக்கு அலர்ஜியாக இருக்கும். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உணவில் உள்ள சில குறிப்பிட்ட புரதங்களை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றுக்கொள்ளாது. அதனால் தான் நமக்கு அந்த உணவின் மீது அலர்ஜி ஏற்படுகிறது. ஆனால், ஒரு உணவு உங்களுக்கு பிடிக்கவில்லை எனக் கூறுவது பொதுவான பிரச்சனை. அதனால் உங்கள் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 பொதுவான அலர்ஜிகள்...
இறால் : கடல் உணவுகளில் ஒன்றான இறால் பலருக்கும் அலர்ஜியாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள புரதங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என நம் நோய் எதிர்ப்பு சக்தி தவறாக கருதுகிறது. கடல் உணவுகளில் இருக்கும் டிரோபோமியாசின், அர்ஜினைன் கினாசி மற்றும் பர்வால்புமின் போன்ற புரதங்கள் நமக்கு அல்ர்ஜியை உருவாக்குகின்றன. கடல் உணவுகள் உங்களுக்கு அலர்ஜி என்றால், அது உடனடியாக உடலில் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சிராய்ப்புகள், அரிப்பு, சுவாசப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும்.
கோதுமை : இதில் உள்ள குளுட்டன் காரணமாகவே நமக்கு கோதுமை அலர்ஜியாக இருக்கிறது என பலரும் தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். பொதுவாக உணவுகளில் குளுட்டன் இருந்தால் அது சீலியாக் நோயை உண்டாக்கும். உங்களுக்கு கோதுமை அலர்ஜி என்றால் அதை சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
முட்டை : முட்டையை அலர்ஜியான உணவுகளில் ஒன்றாக கூறுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இது அலர்ஜியாகும். முட்டையில் உள்ள வெள்ளைக் கருவிலும் மஞ்சள் கருவிலும் வெவ்வேறு புரதங்கள் உள்ளன. ஆகையால் இதில் ஏதாவது ஒன்று உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது செரிமானம் மற்றும் சுவாசப் பிரச்சனைகள், தோலில் அரிப்பு போன்றவைகளை உண்டாக்கக் கூடும்.
பசும் பால் : லாக்டோஸ் பிடிக்காதவர்கள் மற்றும் பசும் பால் மீதான அலர்ஜி.. இந்த இரண்டையும் மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். லாக்டோஸ் பிடிக்காதவர்கள் பாலை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள். ஆனால் பிறரோ, பசும் பாலை மட்டும் உணவில் சேர்க்க மாட்டார்கள். பசும் பால் அலர்ஜி கொண்டவர்களுக்கு தோல் அரிப்பு, வீக்கம், வாந்தி போன்றவை ஏற்படும். இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருப்பது தெரிந்தால் பசும் பால் மற்றும் அதில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
வேர்க்கடலை : உங்களுக்கு வேர்க்கடலை அலர்ஜியாக இருந்து அதை நீங்கள் சாப்பிட்டால் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இதற்கு என்ன காரணம் என்று நிபுணர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. வேர்க்கடலை அலர்ஜி என்பது பரம்பரை ரீதியாக வரக்கூடியதாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. வேர்க்கடலை பருப்பு வகையாக இருந்தாலும், இதன் மீது அலர்ஜியாக இருபவர்களுக்கு பாதாம், வால்நட் போன்றவையும் அலர்ஜியாகவே இருக்கும்.
Read More : QR கோடுடன் புதிய பான் கார்டு..!! விண்ணப்பிப்பது எப்படி..? கட்டணம் செலுத்த வேண்டுமா..? ரொம்ப ஈசி தான்..!!